Thursday, January 4, 2007

ஐயப்ப குருஸ்வாமிகள்


நமதுகலாச்சாரத்தின் சாராம்சமாக விளங்குவது மிக புனிதமான சபரிமலை யாத்திரை ; இந்தப் புனித யாத்திரையின் மூலம் நமது இந்து கலாச்சாரத்தை காப்பாற்றி வருபவர்கள் குருஸ்வாமிகள் . நமது சாஸ்திரத்தின் இலட்சியமாகிய த்துவமஸி - நீயே கடவுளாக இருக்கிறாய் என்பதை மாலையணிந்தவர்கள் அனைவரையும் ஸ்வாமி என்று, ஐயப்பா என்றும் அழைப்பதன் மூலம் சபரிமலை யாத்திரை உணர்த்துகிறது.

வேதத்தின் பார்வையில் கடவுள் !!



கடவுளைப்பற்றிய வேதத்தின் பார்வை அலாதியானது:
`ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்று ஈசாவாஸ்ய உபநிஷத் கூறுகிறது . கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். அதனால் இங்கு இருக்கும் அனைத்து பொருளிலும், ஜீவராசிகளிலும் இறைவன் இருக்கின்றார். இதை நம்முடைய சாஸ்திரம் , வேதங்களின் துணைகொண்டு தெளிவாக நிரூபிக்கிறது. வேதங்களில் கூறப்பட்டவை தர்க்கத்திற்கும் , அனுபவத்திற்கும் வேறுப்பட்டவை அல்ல . அதனால் இதை நம்புவது மட்டுமே அன்றி, சாஸ்திரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டியது என்பதே மிக முக்கியமானதாகும். இதையே நமது சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இதையே பகவான் கிருஷ்ணர் கீதையில் மிக விபரமாக விளக்குகிறார்.





மயாததமிதம் ஸர்வம் , ஜகதவ்யக்த மூர்தினா (ch.9-4 )



இந்தஜகத்தனைத்தும் புலப்படாத ஸ்வரூபமுள்ள என்னால் வியாபிக்கப்பட்டிருக்கிறது .



மத்த: பரதரம் நாந்யத் , கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய
மயிஸர்வமிதம் ப்ரோதம் , ஸீத்ரே மணிகணா இவ (Ch.7-7)



தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் மேலானது வேறு ஒன்றும் இல்லை. நூலில் மணிகளின் வரிசைகள் (கோர்க்கப்பட்டது ) போல், என்னிடம் இவையனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.



பீஜம்மாம் ஸ்வர்வபூதாநாம் , வித்தி பார்த்த
ஸநாதநம்(Ch.7-10)



பார்த்தா, எல்லா பிராணிகளுக்கும் சாச்வதமான வித்தாக என்னை அறிவாயாக.



"அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம்
ப்ரவர்த்ததே" (Ch.10-8)



நானேஅனைத்திற்கும் பிறப்பிடம் , என்னிடமிருந்தே அனைத்தும் இயங்குகின்றன.



யோயோ யாம் யாம் தநும் பக்த : ச்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்யதஸ்யாசாலம் ச்ரத்தாம் , தாமேவ விததாம்யஹம் (Ch.7-21 )



எந்த(ஆசையுடன் கூடி ) பக்தன் எந்த மூர்த்தியை சிரத்தையுடன் வழிபட விரும்புகிறானோ, அவனுடைய அந்த சிரத்தையையே நான் அசையாததாக (உறுதியானதாக) ஆக்குகிறேன் .



ஸதயா ச்ரத்தயா
யூக்தஸ்தஸ்யாராதனமீஹதே
லபதேசதத: காமான் மமைவ விஹிதான்ஹி தாந் (Ch.7-22)



அவன்அந்த சிரத்தையுடன் கூடியவனாய், அந்த தேவதையுடைய வழிபாட்டை செய்கிறான் . அதனிடமிருந்து என்னால் விதிக்கப்பட்டே ஆசைப்பட்ட அந்த பொருள்களை நிச்சயமாக அடைகிறான் .



பகவான்கிருஷ்ணரின் மேற்கூறிய வார்த்தைகள் மூலம் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் / நிறைந்திருக்கிறார் என்ற தத்துவம் தெளிவாகிறது. அதனால் கடவுளை எந்த உருவத்திலும் பூஜித்து பலன் அடையலாம். கடவுளின் அனுக்கிரஹம் ஜாதி பிரிவு வேறுபாடில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆகையால்தான் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்களது உன்னத பக்தியால் கடவுளை அடைந்து, கோவில்களில் தங்களுக்கென தனி இடமும் பெற்றுள்ளனர் .


மதம்மூலமாக நாம் எதை அடைய நினைத்தாலும் , இறைவனை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் அது முழுமை பெறுகிறது. ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் எடுப்பதைப் போல நாம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். மேற்கண்ட இறைவனைப் பற்றிய கருத்துக்கு எதிரான மதக் கொள்கைகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்பொழுது தான் கடவுளையும் , அவரின் அனுக்கிரஹம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்து கலாச்சாரத்தை ஆராய்ந்து , புரிந்து கொண்டு , திட்டமிட்ட செயல்திட்டத்தின் மூலம் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும் .




உலகில்மக்களிடையே போட்டியும் , பொறாமையும், அமைதியின்மையும் நிறைந்திருப்பதால் வேதம் கூறும் கடவுளைப்பற்றிய அறிவை புரிந்து கொள்வது அவசியம் . ஆகையால் மனித குலத்தை காப்பதற்கு இந்து கலாச்சாரத்தை நிலைநிறுத்துவது மிகவும் அவசியம்.

Wednesday, January 3, 2007

சபரி மலையின் 18 படிகளும் 18 விதிமுறைகளும்


ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் மிகச்சிறந்த சீடரான சுவாமி பரமார்த்தானந்தா சபரி மலையின் 18 படிகளுக்கும் 18 விதிமுறைகளை விளக்கி நாம் எப்படி மோட்சத்தை அடையலாம் என்று வழி காட்டுகிறார்.


1ம் படி -அஹிம்சை : உடலாலோ, வாக்காலோ அல்லது மனதளவிலோ கூட பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது அஹிம்சை.


2ம் படி - வாய்மை : பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். நேர்மையாக நடக்க வேண்டும் இது வாய்மை.

3ம் படி - திருடாமை : பிறர் பொருளை அபகரிப்பது மட்டும் திருட்டு அல்ல. பிறருக்கு நியாயமாக சேரவேண்டியதை, தர வேண்டியதை கொடுக்காமல் இருப்பதும்/குறைத்து கொடுப்பதும் கூட திருட்டே ஆகும்.


4ம் படி - ப்ரஹமசர்யம் : குடும்பஸ்தராக இருந்த போதிலும் இந்த விரத நாட்களில் பிரம்மச் சர்யத்தை கடைபிடிக்க வேண்டும்.

5ம் படி - பிறர் பொருள் விரும்பாமை: நமக்கு சேர வேண்டியது அல்லாத, இலவசமாக பிறர் கொடுக்கும் எதையும் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் .

6ம் படி - சுத்தம் : உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் தூய்மைக்கு 2 வேளை குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு பூஜை, இறைவனை போற்றுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

7ம் படி - மனநிறைவு : நம்மிடம் இருப்பதில் திருப்தி அடைவது, அத்யாவசிய பொருள்களை தவிர மற்றவற்றை நாடாமல் இருப்பது.

8ம் படி - தவம் : உணவு விரதங்கள், செருப்பு போடாமல் இருத்தல் போன்ற நியமங்களை முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.

9ம் படி - சாஸ்திரம் படித்தல் : வேதங்கள், பகவத்கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம், ஐயப்ப சரிதம், தேவாரம், திருவாசகம் போன்ற சாஸ்திரங்களை (எந்த மொழியிலும் ) தினமும் படிக்க வேண்டும்.

10ம் படி - அடைக்கலம் : பொருள் மற்றும் உறவுகளைவிட பகவானையே சகலமும் என சரணடைய வேண்டும்.

11ம் படி - த்யானத்தில் அமர்தல் : சுத்தமான இடத்தில் நேராக, ஸ்திரமாக, சுகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

12ம் படி - சுவாசப்பயிற்சி : 12 முறை மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் .

13ம் படி - புலன் அடக்கம் : ஐம்புலன்களை உலக விஷயங்களின்பால் செலுத்தாமல் இருக்க வேண்டும் .

14ம் படி -இறைவனுடன் ஒன்றுதல்: அலைபாயும் மனதை இறைவனிடம் மட்டுமே செலுத்துதல்.

15ம் படி - த்யானம் : இறைவனின்பால் செலுத்திய மனதை தொடர்ந்து அதே நிலையில் வைத்திருத்தல் .

16ம் படி - ஸமாதி நிலை : இறைச் சிந்தனையை தவிர வேறெதுவுமற்ற நிலையில் ஆழ்ந்து இருத்தல்.

17ம் படி - பாபத்தை துறத்தல்.

18ம் படி - புண்ணியத்தை துறத்தல்.

மேலே சொன்னவற்றில் 16 படிகளை கடப்பது நம் முயற்சியில் உள்ளது. 16 படிகளை சிரத்தையுடன் கடந்தால் 17-18 ம் படிகளை கடக்க ஐயப்பனே நம் கைபிடித்து அழைத்துச் செல்வார்.

நெய் அபிஷேகம் இறைவனுடன் நமது ஐக்கியத்தை விளக்கும் . சபரிமலை ஐயப்பனே ஆதிகுரு . தர்ம சாஸ்தா என்றால் - சாஸ்திரத்தை கற்பிக்கும் குரு. குருவான அவரே ஸ்வாமியாகவும் இருப்பதால் நம் எல்லோருக்கும் குருஸ்வாமியாக இருக்கிறார். சரி ஏன் இந்த விரதத்தை குறிப்பிட 48/60 நாட்களில் மேற்கொள்ள வேண்டும்? பரீட்சார்த்தமாக இந்த கால கட்டத்தில் நாம் முயற்சி செய்து வெற்றி பெறுவதால் , பிறகு அதை ஆண்டு முழுவதற்கும் நீட்டிக்கலாம். பிறகு வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடித்து இந்த வாழ்வில் முழுமை பெறலாம்.

ஐயப்பன்காட்டும் சின் முத்திரையில், கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கிறது. ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிக்கிறது . கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் சேரும் பொழுது வாழ்க்கை பூரணமடைகிறது. இந்த ஜீவ, பிரம்ம ஐக்கியத்தை குறிப்பது சின் முத்ரா. அதுவே நாம் பதினெட்டு படிகளையும் கடந்தவுடன் காணும் "தத்துவமஸி " (அதுவே நீயாக இருக்கிறாய்).

தர்மம்

தர்மம்என்பது மனிதகுலத்திற்கு பாரதத் திருநாட்டின் ஈடுஇணையற்ற கொடை. அதன் பழமையினாலும், பயன் பாட்டினாலும் , உலகம் தழுவிய பரந்த சிந்தனையாலும் இந்த தேசத்தைச் சார்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனையையும் மேம்படச் செய்கிறது. இன்று நாம் அனுபவித்துவரும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் அடிப்படைக் காரணம் தர்மத்தைவிட்டு விலகிச் செல்வதே ஆகும். புலனின்பங்களின் புனலில்சிக்கி நிலையிழந்த மனிதகுலத்தின் பிரச்சனைகள் மேலும் பன்மடங்கு பெருகி வருகின்றன . நாம் நமது இச்சைகளை, வேண்டும் என்னும் வேட்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதின் மூலம் அமைதியிழந்து ஆனந்தத்தை இழந்து தவிக்கின்றோம். இந்த சூழ்நிலையில் நமது அனைத்து சமுதாய, பொருளாதார , மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ஒரேதீர்வு " தர்மம் மட்டுமே. தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை மீண்டும் அமைப்பது மட்டும்தான் நமது அனைத்து இன்னல்களுக்கும் முழுமையான தீர்வாகும்".